"கல்லூரி மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்" - யு.ஜி.சி உத்தரவு

0 2941
"கல்லூரி மாணவர்கள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்" - யு.ஜி.சி உத்தரவு

கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் அக்டோபர் 31ம் தேதிக்குள் பாதியிலேயே வெளியேறினால், அவர்கள் செலுத்திய முழு கல்விக் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவங்களுக்கு யு.ஜி.சி உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது சேர்க்கை ரத்து செய்வதற்கு, தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

ஜே.இ.இ உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பலர் முன்னெச்சரிக்கையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள நிலையில் அவர்களது நலன் கருதி யு.ஜி.சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments